தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – சுகாதார அமைச்சர்

277 0

தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்  என தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வார நாட்களில் மேற்கொள்ளவுள்ள மத விழாக்களை, குறித்த முக்கியமான தருணத்தை கருத்திற்கொண்டு நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் காணப்படும் கொரோனா தொற்று முன்னைய காலத்தை விட மாறுபட்டதாகக் காணப்படுகின்றது.சுனாமி போல பரவி வரும் கொரோனா இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 14 நாட்களுக்குப் பிறகு தான் வைரஸ்கள் அறிகுறிகளைக் காட்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தொற்று அலைகளிலிருந்து நாடு ஓரளவு முன்னேறும் போது மீண்டும் கொரோனா தொற்று ஏற் பட்டுள்ளது. இந்த நேரத்தில் உங்கள் பொறுப்புகளை முறையாக நிறை வேற்ற வேண்டும் என பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகத்துடன் ஒப்பிடுகையில் மக்கள் வழங்கிய ஆதரவின் காரணமாக நமது நாடு தொற்றுநோயை கட்டுப்படுத்த முடிந்தது. இதனால் அரசாங்கம் என்ற வகையில் நன்றி தெரிவிக்கிறோம்.

கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் தேவையான அனைத்து வசதிகளும்  வைத்தியசாலைக்கு வழங்கப்படும்.  தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒட்சிசனை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.