பயணங்களை குறைத்துக்கொண்டு முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மக்களின் நலனில் அக்கறை கொண்டே சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.