புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க மகிந்த எதிர்ப்பு!

255 0

80118841_855e0bad-c4df-4e95-a6b3-5b0add63b63bபுதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கூட குடியரசுத் தலைவர் கொண்டுள்ள அதிகாரத்தை நிறைவேற்றுபவர்களாக மாநில ஆளுநர்கள் விளங்குகின்றனர்.

இந்தியாவின் மாநில ஆளுநர்களால் மாநில சட்டமன்றங்களைக்கூட கலைக்கமுடியும். ஆனால் சிறீலங்காவில் அப்படியல்ல.

இது சிறீலங்காவின் ஒற்றையாட்சிக்கு பாதகத்தை விளைவிக்கக்கூடியது.சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிங்களப் பெரும்பான்மையினரை பகைத்துக்கொண்டு தமிழ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்த முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.