கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!!

213 0

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாளை (வியாழக்கிழமை) கள விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், சீனாவின் தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்வதற்கான சீனா தூதரகத்தின் அதிகாரம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பினார்.

மேலும் விடயம் தொடர்பாக ஆராயுமாறு ஹர்ஷன ராஜகருணா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கேட்டுக்கொண்டார்.