கரோலின் ஜூரி 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி அல்ல

217 0

கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை ;திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக ;இன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில் ; இரண்டாம் இடத்தை பிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் ;தற்போது 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருமதி உலக அழகி அமைப்பு ஒரு அறிக்கையில்,

கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த முடிவை அவர் சுயமாக எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

“திருமதி ஜூரி மற்றும் அவரது குடும்பத்தினக்கு எதிர்கால முயற்சிகளுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என திருமதி உலக அழகுராணி அமைப்பு ;தெரிவித்துள்ளது

இந்த மாத ஆரம்பத்தில் ஜூரியை திருமதி இலங்கை போட்டியை கடும் அரசியல்மயமாக்கலில் களங்கப்படுத்தியதாகக் கூறி அவதூறாக பேசிய பின்னர் அவர் தனது கிரீடத்தை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான ; இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும் ; போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக் கூறி கரோலின் ஜூரி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்