அனைத்து மே தின பேரணிகளை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்தார்.
தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்திருந்தால் இதற்கு முன்னர் இடைநிறுத்தப்பட வேண்டிய பல நிகழ்வுகள் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது சுகாதார காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு என தெரிவிக்க முடியாது என குறிப்பிட்ட ரில்வின் சில்வா, ஏனெனில் பேரணி தொடங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செய்திருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
பேரணிகளில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இதை அனுமதிக்கவில்லை என தாம் சந்தேகிப்பதாகவும் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.