மே தின கூட்டங்களுக்குத் தடை

274 0

மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என  இராணுவத் தளபதிதெரிவித்துள்ளார் .

கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று ( செவ்வாய்க்கிழமை )  இராணுவத் தளபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனியே நடத்த ஆளுங்கட்சியிலுள்ள சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.