துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கம்பஹா – நெதுன்கம பகுதியைச் சேர்ந்த 32 வயதான நப ரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என அஜித் ரோஹண தெரி வித்துள்ளார்.
குறித்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்ப வம் ஒன்றில் அவர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் குறித்த நபரின் சடலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.