கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்டமூலம் உச்சநீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இதனை தெரிவித்துள்ள அவர், கொழும்பு துறைமுகநகர திட்டத்தின் மூலம் அரசாங்கம் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளிலும் பிரிவினைவாதத்திலும் ஈடுபடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொழும்பு துறைமுகநகர திட்டம் இந்த நாட்டின் பிரஜைகளை மூன்றாம் தர பிரஜைகளாக மாற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வெளிநாடொன்றிற்கு அடிமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்பதற்காக ஐக்கியமக்கள் சக்தி நீதிமன்றத்தின் முன்னிலையி;ல் அனைத்து விடயங்களையும் சமர்ப்பிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.