இராணுவத்தினர் இரண்டு பேரை காயப்படுத்தி தப்பிச் சென்ற கெப் ரக வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர் ஆகியோரை கைது செய்வதற்காக 4 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் அந்த பிரதேசத்தினை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள், வவுனியா மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் ஓமந்தை பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கட்டளையை மீறி பயணித்த குறித்த கெப் ரக வாகனம் மோதியதில் இரு இராணுவ சி்ப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
சட்டவிரோத மரக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப் ரக வாகனமே இவ்வாறு இராணுவத்தினரை மோதி சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.