கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்ட மூலம் குறித்து பௌத்த மத தலைவர்களிற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசபிரதிநிதிகள் மல்வத்தை அஸ்கிரியபீடாதிபதிகளை சந்தித்து உத்தேச சட்டமூலம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அஜித்கப்ரால் இருவரும் பௌத்தமத பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரதமர் சார்பில் புதிய சட்டமூலம் குறித்து பௌத்தமதபீடாதிபதிகளிற்கு தெளிவுபடுத்துவதற்காகவே இந்த சந்திப்பு என இராஜாங்க அமைச்சர் கப்ரால்தெரிவித்துள்ளார். ஏதாவது கரிசனையிருந்தால் அதனை வெளிப்படுத்துமாறு தெரிவித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் தெரிவிப்பது போல நாட்டை சீனாவின் காலனியாக மாற்றப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.