எதிர்வரும் மே மாதமளவில் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் அதிகரிக்கக்கூடும் என அரச வட்டார தகவல் தெரிவித்துள்ளன.
12.5 கிலோ கிராம் நிறையுள்ள லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவிலும் லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 655 ரூபாயாலும் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்தன.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் தமது நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தற்போது காணப்படும் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்தும் விற்பனை செய்வதற்கு முடியாதென அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாவது, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளபோதிலும் அது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.