சிறிலங்காவில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 354ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 92 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 907 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 615 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.