இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்து.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 78 பேருக்கும் களுத்துறையில் 23 பேருக்கும் திருகோணமலையில் 21 பேருக்கும் இரத்தினபுரியில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு மற்றும் குருநாகலில் 18 பேருக்கும் பொலன்னறுவையில் 13 பேருக்கும் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 9 பேருக்கும் கம்பஹாவில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலையில் 05 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் மூவருக்கும் மொனராகலையில் இருவருக்கும் காலி, அனுராதபுரம் மற்றும் மட்டக்ளளப்பில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாட்டில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவர்களில் 92 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர்.