பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்திருந்தாலும், அது தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லை என அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிய முகாமைத்துவமின்றி, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சஷே பைக்கற்று உள்ளிட்ட, 6 பொலித்தீன் உற்பத்திகளுக்கு, கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
சுற்றுசூழல் மாசடைவதை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறிருப்பினும், குறித்த தடை மூலம், எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
தடை செய்வதன் மூலமாக மாத்திரம், இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாது,
குப்பை முகாமைத்துவம் தொடர்பில், இதனைவிடவும் விரிவாக சிந்திக்க வேண்டும்.
20 மில்லிமீற்றருக்கு குறைந்த அளவான ஷஷே பைக்கற்றுக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும், அதே கொள்ளளவையுடைய, சோஸ் மற்றும் மருந்து பைக்கற்றுக்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
இவற்றினூடாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படதா? என என பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, சுற்றுச்சூழல் சட்டத்தின், புதிய திருத்தங்கள் ஊடாக அந்தப் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்