புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களை நோக்கி பயணித்த மக்கள் மீள கொழும்பு திரும்புவதற்காக நாளை(15) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அந்த சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணாஹங்ச இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலதிகமாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலே இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிற்கு பிரவேசிக்கவுள்ள பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் தூர இடங்களில் இருந்து தலைநகருக்கான தொடருந்து சேவைகள் வழமைபோல இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை(19) முதல் சகல தொடருந்து சேவைகளும் வழமை போல இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்