தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

299 0

330px-mettur_damஇலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை தொடருமானால் அனல் மின் நிலையங்கள் ஊடாக மின் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகளவில் மின் உற்பத்தி செய்யும் போது ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்று கூறினார்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலோ அல்லது கெரவபிட்டிய உற்பத்தி நிலையத்திலோ பாதிப்புக்கள் ஏற்பட்டால் தற்போது காணப்படுகின்ற நிலமையில் மின் உற்பத்தியில் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறயினும் மின் வெட்டின்றி மக்களுக்கு தொடர்ந்து மின் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தமித குமாரசிங்க கூறினார்.

2018ஆம் ஆண்டாகும் போது நாட்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

எனினும் இதுவரை உரிய முறையொன்றை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.