நாடளாவிய ரீதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை-வே.இராதாகிருஷ்ணன்

271 0

 

download-1நாடளாவிய ரீதியில், 03 ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில், 03ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், மாணவர்களிடையே விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாடளாவிய ரீதியில், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 03 ஆயிரத்து 850 பேரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வெளியிடப்படும். அதன்பின்னர், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணபிப்போர், 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்திப்பெற்றிருப்பது அவசியமாகும்.

அத்துடன் ஏதேனும் ஒரு விளையாட்டுப்போட்டியில், மாகாண, தேசிய, சர்வதேச சான்றிதழ்ளைப் பெற்றிருப்பதும் அவசியமானதாகும்.

இத்தகைய தகைமைகளைக் கொண்டிருப்போர், பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.