நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

297 0

bandula-gunawardena5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி ரூபா பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார் எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1300 கோடி ரூபா மத்திய வங்கியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு பாரதூரமான ஒன்றாகும் என  தெரிவித்துள்ள அவர்,  இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

நிதி அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு குறித்த உண்மைகளை மக்களுக்கு தெளிவூட்டத் தவறினால் 5000 ரூபா நோட்டு பயன்பாடு தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.