உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த கோவில்கள் மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய படி.
கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தரகாண்ட் அரசு உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்த மகத்தான முடிவை எடுத்த முதல்வர் திரத்சிங் ராவத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.