பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

256 0

aaa2929இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

பொலநறுவை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தயாராகிவருகிறது.அத்துடன் சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு குருநாகலிலிருந்து ஹபரனைக்கு புகையிரதப்பாதை ஒன்று அமைக்கப்படுகின்றது.

இந்த செயற்பாடானது துறைமுகத்தை விற்பனை செய்து புகையிரத வீதி ஒன்றை அமைப்பதாகவே அமைகின்றது. ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்மூலம் வளங்களை விற்பனை செய்து தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசு முயற்சிக்கின்றது. இந்த முயற்சியானது தற்காலிகமானது.

எனவே, அரசாங்கத்தின் இத்தகைய பொருளாதார கொள்கைகள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என அநுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.