உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா?

361 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து நாடுகளில் வசித்த சுமார் 50 பேரை நாடுகடத்த முடிந்துள்ளது இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன ஏனையவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறியவேண்டும், விடுதலைப்புலிகளால் கூட ஒரு மணித்தியாலத்தில் எட்டு இடங்களில் தாக்குதலை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நீண்டகால திட்டமில்லாமல் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.