தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள், குப்பைகள்

287 0

thileepan-1024x682-768x512யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு ‘புல்மோட்டையில் கனிய வளத்தையும், எட்கா நிலக்கரி சுரங்கத்தையும் விற்பதற்கு எதிராக போராடுவோம்’ எனும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா வரும் பயணிகள் திலிபன் நினைவிடத்திற்கு அருகில் வாகனங்களை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதாகவும், பின்னர் குப்பை கூழங்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால் நினைவுத் தூபியை சுற்றியுள்ள பகுதிகள் குப்பைகூழமாக காணப்படுவதாக தெரிவித்தனர்.

தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவு தினத்தில் மட்டும் தமது அரசியல் இலாபங்களுக்காக அதனை துப்பரவு செய்து விளக்கேற்றுகின்றனர்.

அத்துடன், குறித்த நினைவுத் தூபியை புனரமைக்க போவதாக வாக்குறுதி அளித்து வழங்கிவிட்டு சென்று விடுகின்றனர்.

எனினும், இதனை புனரமைப்பதற்கு எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.