பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை

437 0

palitha_thewarapperuma-415x260பல்வேறு குற்றஞ்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 4 பேர் ஒரு குற்றச்சாட்டில் இருந்து மத்துகம நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்துகம மீகாதென்ன கனிஷ்ட பாடசாலையில் 9 மாணவர்களை சேர்க்குமாறு பலவந்தப்படுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் பலகுற்றச்சாட்டுக்களின் பேர் தெவரப்பெரும உள்ளிட்ட 4 பேர் கைதாகினர்.

இதன்படி அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த வீதியை மறித்து 89 ஆயிரம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம் இந்தகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது தாய்மாரும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.