டெங்கு தொற்று – விசேட ஏற்பாடுகள்

277 0

downloadடெங்கு தொற்று பரவுவதற்கு ஏதுவாக சூழலை வைத்திருப்பவர் தொடர்பில் முறைப்பாடு செய்ய 24 மணி நேரமும், செயல்படும் வகையில் மூன்று மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரை உள்ளடக்கியதாக இந்த மத்திய நிலையங்கள் அமையவுள்ளன.

டெங்கு தொற்று அதிகமாக உள்ள மேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்த மத்திய நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு நுளம்பை ஒழிப்பதற்காக மேலதிகமாக 500 பணியாளர்கள் புதிதாக நியமிக்கவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பினை கொல்வதற்கு ஏற்ற புகையினை வெளிப்படுத்தும் இயந்திரங்களை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களில் டெங்கு தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48 ஆயிரத்து 682 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 77 பேர் மரணித்துள்ளதாகவும் தொற்று நோய் தவிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுளம்பு பெருக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.