கஞ்சா போதைபொருளை கொண்டுச் சென்ற ஒருவர் ரத்தினபுரி –எம்பிலிப்பிட்டி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வேன் ஒன்றில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை ஏற்றி செல்லும் போர்வையில், குறித்த கஞ்சா போதைப் பொருளும் ஏற்றிச்செல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 கிலோகிராம் கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்;ந்த எனவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.