க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 64 வயது பரீட்சார்த்தி

280 0

samarathunga-001இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 64 வயதானபரீட்சார்த்தி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த எம்.சமரதுங்க என்ற ஒருவரே இம்முறை சாதாரண தர பரீட்சைக்குதோற்றியுள்ளார்.

1971ஆம் ஆண்டு முதல் தடவையாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியசமரதுங்க, அப்போது 6 பாடங்களில் 3 சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் சாதாரண தர பரீட்சைக்குதோற்றியுள்ளார்.

அவர் அதில் நான்கு சாதாரண சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளார்.அதனைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியராக கடமையாற்றியவந்த சமரதுங்க,2010ஆம் ஆண்டு ஓய்வூ பெற்றுள்ளார்.

தமிழ் மொழியில் காணப்படுகின்ற பற்று காரணமாக சமரதுங்க, இம்முறை கல்வி பொது தராதரசாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்களவர்களுக்கு இரண்டாம் மொழியாக பதிவாகியுள்ள தமிழ் மொழி பரீட்சைக்கு அவர் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.