யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

325 0

 

jaffnaஇலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஐ.தவேந்திரன் அறிவித்துள்ளார்.

15 பிரதேச செயலகங்கள் ரீதியாக 27 தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு பன்னிரண்டு ஆயிரத்துஇருநூற்று அறுபத்தி ஏழு இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மாத்திரம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 32 வேட்பாளர்களிலிருந்து 10 இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள் என்றும் தேசிய இளைஞர் சேவைகள்மன்றத்தின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்குரிய வாக்களிப்பு யாழ்ப்பாணபிரதேச செயலகம் மற்றும் நாவாந்துறை சென்மேரிஸ் சனசமூக நிலையம் ஆகியவற்றில் வாக்களிப்புநிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதியவைத்தீஸ்வரா இளைஞர் கழகத்திலிருந்து பிரேம்குமார் பானுஜன், பாசையூர் சென் அன்ரனிஸ் இளைஞர்கழகத்திலிருந்து கனியூட் ஜொனாஸ்ரின், சென்றலைட்ஸ் இளைஞர் கழகத்திலிருந்து பாலகிருஸ்ணன்சசீந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன்போது யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து 660 பேர் வாக்களிக்க தகுதிபெற்றனர் வாக்களிப்புக்கள் இன்று மாலை 4 மணிவரை இடம்பெற்றன.நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 4 இளைஞர் கழகங்களிலிருந்து போட்டியிட்டனர்.நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கே.சீ.சீ.சீ இளைஞர் கழகத்திலிருந்து சதானந்தன் பவன்,சங்கிலியன் இளைஞர் கழகத்திலிருந்து மோகனேஸ்வரன் கபிலன் மற்றும் இராசையா துவாரகன், காந்திஇளைஞர் கழகத்திலிருந்து திருச்செல்வம் மயூரன் ஆகியோர் போட்டியிட்டனர்.அரியாலை சனசமூக நிலையம் மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய நல்லூர் தேர்தல் தொகுதிவாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றன.

மானிப்பாய் தேர்தல் பிரிவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியவிளான் இளைஞர்கழகத்திலிருந்து செபமாலைநாதன் றொபின்சன், உடுவில் கலையொளி இளைஞர் கழகத்திலிருந்துபஞ்சலிங்கம் தர்சன் ஆகியோர் போட்டியிட்டனர்.நல்லூர் தேர்தல் தொகுதியில் 942 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும் மானிப்பாய் தேர்தல்தொகுதியில் 823 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் கோப்பாய் தேர்தல் தொகுதியில் கோப்பாய் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புநிலையங்களாக கோப்பாய் பிரதேச செயலகம் மற்றும் ஆவரங்கால் கிழக்கு கிராம சேவையாளர்அலுவலகம் செயற்பட்டன.

கோப்பாயில் நீர்வேலி வடக்கு இளைஞர் கழகத்திலிருந்து தில்லைநடேசன் ஜெகன், புண்ணியசீலன்மதுலதாஸ் மற்றம் அச்செழு இளைஞர் கழகத்திலிருந்து ரவிச்சந்திரன் பகீரதன் ஆகியோர்போட்டியிட்டனர்.கோப்பாய் பிரதேச செயலக அலுவலகத்தில் 557 வாக்காளர்களில் 135 பேர் வாக்களித்துள்ளனர்.ஆவரங்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலக வாக்களிப்பு நிலையத்தில் 379 வாக்காளர்களில்94 பேர் வாக்களித்துள்ளனர்.கோப்பாய் பிரதேச செயலக தேர்தல் வாக்களிப்பு பிரதம தேர்தல் கடமை அதிகாரியாக திருமதிரி.நவசத்தியாவும், ஆவரங்கால் கிழக்கு கிராம சேவையாளர் அலுவலக பிரதம தேர்தல் கடமைஅதிகாரியாக திருமதி எஸ்.ராமையாவும் கடமையாற்றினர்