நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் இளைஞர் மற்றும்யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது.வவுனியா மாவட்டத்தில் ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக 7 பேர்போட்டியிட்டனர்.
வவுனியா மாவட்டத்தில் பிரான்சிஸ் கெர்சோன் – தமிழ் தேசிய இளைஞர் கழகம், கணேஸ் நவநீதன் -இளந்தென்றல் இளைஞர் கழகம், ரஞ்சித் விக்ரமட்ணகே தக்சிலா சதுரங்கனி விக்கிரமரட்ண – மகிந்தஇளைஞர் கழகம், சித்தபுர தேவயாலகே திலஞ்சன் சந்துன் திலகரட்ண – ப்ரௌவ்ட இளைஞர் கழகம்,சிறிகரன் கேசவன் – தமிழ் தேசிய இளைஞர் கழகம், தமோதரம்பிள்ளை தீபன் – சூரியன் இளைஞர்கழகம், தேவராசா திலக்சன் – எவரஸ்ட் இளைஞர் கழகம் ஆகியோர் போட்டியிட்டனர்.
குறித்த தேர்தலுக்காக வவுனியா பிரதேச செயலகம், கோவில்குளம் இந்துக் கல்லூரி, செட்டிகுளம்பிரதேச செயலகம், புளியங்குளம் இந்துக் கல்லூரி, வவுனியா தெற்கு பிரதேச செயலகம், நெளுக்குளம்பிரதேச சபை ஆகிய 5 இடங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றதுஇன்று நாடு முழுவதும் 4 மணிவரை இடம்பெற்ற குறித்த வாக்களிப்பில் 225 பேரை தெரிவு செய்ய 916இளைஞர், யுவதிகள் போட்டியிட்ட நிலையில் 663 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றது.