இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த முடிவுகளின் அடிப்படையில் பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா விஜயரூபன் 329 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.நாடளாவிய ரீதியில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும், கரச்சி பிரதேச செயலகத்தில் ஐந்து வேட்ப்பாளர்களும் , பூநகரி பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் ,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆறு வேட்ப்பாளர்களும் போட்டியிட்ட நிலையிலும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக இளைஞர்களின் ஒற்றுமையினால் குறித்த பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கந்தையா விஜயரூபன் என்ற வேட்ப்பாளர் 329 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
ஏனைய பிரதேச செயலகங்களில் ஏற்பட்ட கடும் போட்டி காரணமாக வாக்குகள் பிரிவடைந்த நிலையில் மற்றைய வாக்காளர்களை விட இவர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் வெற்றியீட்டியவர்களுக்கான முதலாவது இளைஞர் பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மகரகமையில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.