மக்கள் அஞ்சலிக்காக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல்-திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்பு.

605 0

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள், மதகுருமார், சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

யாழ் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்  இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுநிலை மன்னார் ஆயர் இராயப்பு யோசப்  இன்று காலை காலமாகியிருந்தார்.

தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஆயருடைய திருவுடல் நாளை காலை 11 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை  மதியம் மன்னாருக்கு எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் திங்கட்கிழமை வட கிழக்கெங்கும் கறுப்பு கொடிகளை பறக்க விட்டு தேசிய துக்கதினமாக அனுஸ்டிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்கள்,கட்சிகள் என பலதரப்புக்களும் மக்களிடையே தேசிய துக்கதினத்திற்கான அழைப்பை விடுத்துவருகின்றன.