வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குருமன்காடு, காளிகோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக வெளியே வராததால் சந்தேகத்தில், அயலில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அந்த தாய் மீட்கப்பட்டுள்ளார்.
மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்ட அவர் வவுனியா பொது வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொடர்ந்தும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.