அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

292 0

22ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் அதிகமான அதிகாரங்களை கொண்டிருந்த நபர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக தன்னால் கூட நடவடிக்கை எடுக்க முடியாது நிலைமை காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை எனவும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படாதவை நடந்தன எனவும் முன்னாள் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு மிகவும் நெருக்கமான ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்றேன். அவ்வாறு சென்ற வேளையில் எமது தவறுகளை புரிந்து கொள்ள முடிந்தது.அதிகாரத்தில் இருக்கும் போது தவறுகளும் குறைகளும் தெரிவதில்லை. அதேபோல் நாம் மிகவும் ஏமாற்றப்பட்டுள்ளோம். எம்மை சுற்றியிருந்தவர்கள் எம்மை ஏமாற்றினர்.
சட்டவிரோதமாக தவறான வேலைகளை செய்தவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்தனர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன்.

அதற்கு எதிராக என்னால் கூட செயற்படும் சந்தர்ப்பம் இருக்கவில்லை என்பதையிட்டு வருத்தமடைகின்றேன். அவர்கள் எம்மை விட அதிகாரம் படைத்தவர்கள்.இதனால், பாதிக்கப்பட்டது அவர்கள் அல்ல மகிந்தவும் அரசாங்கமும் நாமுமே பாதிக்கப்பட்டோம். இவற்றை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.