தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

308 0

img_0539-1024x682நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு  “புல்மோட்டையில் கனிய வளத்தையும், கடஹ கஷா நிலக்கரி சுரங்கத்தையும்  விற்பதற்கு  எதிராக போராடுவோம்” எனும் வாசகம் அச்சிடப்பட்ட பெரிய  சுவரொட்டி   ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில சிறிய சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்தாகவும் தெரிவித்தனர்.

 மேலும் தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்  திலிபன் நினைவிடத்திற்கு அருகில் வாகனங்களை தரித்துவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு  செல்கின்றனர்.  பின்னர் குப்பை கூழங்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் குப்பை கூழமாக காணப்படுவதாக தெரிவித்தனர். 

மேலும் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவு தினத்தில் மட்டும் தமது  அரசியல் லாபங்களுக்காக அதனை துப்பரவு செய்து விளக்கேற்றுகின்றனர்.
பின்னர் இதனை மீளவும் புனரமைக்க போவதாக வாக்குறுதி அளித்து விட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால் இதனை புனரமைப்பதற்கு எதுவித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.