இலங்கை பிரஜாவுரிமையை மறைத்து, இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு – திருச்சி பகுதியிலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தின் ஊடாக இவர்கள் கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றை அடிப்படையாகக் கொண்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாக இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாகதெரியவந்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.