பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பி.ரி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது .இந்தியாவின் ஆந்திர பிரதேஷத்திலுள்ள திருப்பதி ஆலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதி சென்னை நோக்கி பயணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் திருப்பதி நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அன்றைய தினமே அங்கிருந்து இலங்கைக்கு மீள வருகைத் தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.