தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுகின்றனர்- த ஹிந்து நாளிதழுக்கு ரணில் செவ்வி

298 0

ranil-and-hinduதமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பரவலாக்கல் குறித்து அரசாங்கம், முதலமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அத்துடன், தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றமை மற்றும் மக்களுக்கு உதவிகளை வழங்குகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.மேலும், 13ஆவது அரசியலைமப்பு திருத்தத்தை பின்பற்ற வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டும் எனவும், அது வெறும் சட்டத்தின் மாத்திரம் உள்ளடக்கப்பட கூடாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

யுத்த குற்ற பிரச்சினையில் தாம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதாகவும், அதில் பாரியளவு பிரச்சினை காணப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்;. இதேவேளை, இந்தியாவுடன் சிறந்த உறவை இலங்கை அரசாங்கம் பேணி வருவதாகவும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.அத்துடன், இந்திய – இலங்கை மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.