ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கைச்சின்னத்தையும் நீல கொடியையும், கட்சியின் கொள்கைகளையும் முன்னோக்கி கொண்டு சென்று அதனை எதிர்காலத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.நாமும் வலுவடைந்து, கட்சியையும் வலுப்படுத்தி எமது பயணத்தை நாம் செல்கிறோம் என்று எண்ணி செயற்பட வேண்டும்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் நாட்டின் ஒருமைப்பாட்டை இல்லாமல் செய்து, பௌத்த மதத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை இல்லாமல் செய்து, சமஷ்டியை ஏற்படுத்தி, வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க போவதாக பல்வேறு நபர்கள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமையை வழங்கி, ஏனைய மதங்களுக்கான உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.மேலும் தொகுதி வாரி முறையில் தேர்தல் நடத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா