இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தில்பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேஷியா விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விமானத்தில் மூன்று விமானிகளும், 10 விமானப்படை உறுப்பினர்களும் பயணித்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கான காரணமாகஅமைந்திருக்கலாம் என அந்த நாட்டு விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்2015ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 12 சிப்பாய்கள் உள்ளிட்ட109 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.