எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என வணிகஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பண்டிகை காலங்களில் அரசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அரசியின் விலையை அதிகரிக்கஎந்தவொரு நபருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்பண்டிகை காலங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்ட திட்டங்களை மீறி செயற்படுகின்றவர்த்தகர்களை கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறான வர்த்தகர்களை கைது செய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேடசுற்றி வளைப்புக்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கூறியுள்ளார்.