மட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை

342 0

battiஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில்,நாடளாவிய ரீதியில் விசேட நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த நடமாடும் சேவைமட்டக்களப்பு தலைமை பொலிஸ்  நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இன்று மட்டக்களப்புதிராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ஜி.டி.தீ காஹா வதுற தலைமையில் இடம்பெற்றகுறித்த நிகழ்வில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு,பனிச்சையடி, நாவலடி ஆகிய கிராம சேவை பிரிவு கிராம மக்களின் நலன் கருதி இந்த நடமாடும்சேவை இடம்பெற்றது.குறித்த நடமாடும் சேவையில் மக்களுடைய பொலிஸ் தொடர்புபட்ட முறைப்பாடுகள், சிறுவர் மகளிர்தொடர்பான முறைபாடுகள், கிராம மட்டத்தில் கிராம சேவையாளர்களின் ஆவனபதிவுகளான கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, காணி தொடர்பான ஆவன விபரங்கள், மோட்டார்வாகனம் தொடர்பான முறைபாடுகள், நோய் தொடர்பான ஆயுள்வேத வைத்திய பரிசோதனைகள்,அதற்கான மருந்து விநியோகம் போன்ற சேவைகள்; இடம்பெற்றன.அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், உலர்வுணவு பொருட்கள்,மரக்கன்றுகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு–அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் டப்ளியு.ஜெ.ஜாகொட,மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தமந்திரி, சிவில்பாதுகாப்புக்குழு தலைவர் ஸ்டீபன் ராஜன், வர்த்தக சங்க உறுப்பினர்கள், மத தலைவர்கள், ஆயுர்வேதவைத்தியர்கள், பொலிஸ்  உத்தியோகத்தர்கள்,  சிவில் அமைப்புக்களின்உறுப்பினர்கள்,  கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.