முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பலவீனமானது என பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
“அவருடைய வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். அதுவும் சந்தேகத்துக்கு இடமானது. அவ்வாறான சம்பவத்துடன் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாமையானது முரண்பாடாகும்” என்றார்.
லசந்த விக்கிரமதுங்கவுக்கு இடம்பெற்றதைப் போல, அவருக்கும் (சந்திரிகா) இடமளிக்கமுடியாது. அவருடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில், பாராளுமன்றத்திலும் அண்மையில் குமார் வெல்கம எம்.பிய உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.