பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
70 டிகிரி உறைநிலையில் வைத்திருப்பதற்கான சேமிப்பு வசதிகள் இலங்கையிடம் இல்லை என்றும் இருப்பினும் உற்பத்தியாளர் அதற்கான தீர்வினை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
குறித்த நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகளை ஏறக்குறைய ஒரு வாரம் சாதாரண உறைநிலையில் வைத்திருக்க முடியும் என என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து விரைவில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.