தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல- ப.சிதம்பரம்

318 0

மின்மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

* தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று அதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது. இது உண்மையா என்றால் உண்மையல்ல.

* தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

* 50% வெளி மாநிலங்களில் வாங்கும்போது எப்படி தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

* மின்மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள். அந்த  நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதே உண்மை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.