தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர்களின் குரலை தேசிய மட்டத்திலே ஒலிக்கச் செய்தலையும் புரணத்துவமான அரசியல்வாதிகளை எதிர்காலத்திலே அறிமுகப்படுத்தலினையும் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதனையும் குறிக்கோளாக கொண்டு 2017ம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்ற வேலைத்திட்டத்தினை தேசிய மட்டத்திலே நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது
இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் 07 மணி முதல் பிற்பகல் 04 மணி வரை இடம்பெறவுள்ளது
இளைஞர் நாடாளுமன்றத்திற்கென நாடளாவிய ரீதியில் 225 பேரை தெரிவுசெய்வதற்காக 945 பேர் போட்டியிடுகின்றனர்.
670 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் இந்த தேர்தலில் 332701 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்
இந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியிலும் ஒருவரை தெரிவு செய்வதற்காக 27 பேர் போட்டியிடுவதாகவும் இத்தேர்தலுக்கு வாக்களிக்க 4276 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களிலுமாக எட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்படுவதாகவும் இதற்கான சகல வேலைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட இளைஞார் சேவை அதிகாரி மா.சசிக்குமார் தெரிவித்தார்
இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 711 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கலைமகள் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 666 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
துணுக்காய் பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 593 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மாங்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 380 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில்579 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 474 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும்
புதுக்குடியிரப்பு பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 665 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும், மணலாறு பிரதேச செயலகத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் 218 பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.