மாத்தறை – வெல்லமடுவ கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
ரு{ஹனு பல்கலைக்கழகத்தின் கட்டிட நிர்மாணப்பணியில் தொழில் புரிந்துவரும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போயுள்ள இளைஞர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிர் காணாமல் போயுள்ள இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.