ஊடக அடக்குமுறைக்கு குறித்து தூதரகங்களிடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்!

289 0

media-2ஊடக அடக்குமுறைக்கு குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் தொடக்கம் இந்த தெளிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

தற்காலத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுவதனால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டமை குறித்தும் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களிடமும் இது விடயமாக முறைப்பாடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.