ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
மைத்திரிபால சிறி சேனவுடன் மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோலாலம்பூரில் நேற்று(16) செய்தியாளர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் ரஷ்யா அதிபரின் அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சிறிசேன, எதிர்வரும் 3 மாதங்களுக்குள் மொஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.