அரிசி விலைகளில் திடீர் மாற்றம்

336 0

அரிசி விலைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த விலை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்டுக்களில் மேற்படி விலைகளில் அரிசியை கொள்வனவு செய்யமுடியுமென விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.