யாழ் மாநகர முதல்வருடன் தொடர்பை பேணியோர் சுகாதாரதுறையை தொடர்புகொள்க!

390 0

கொவிட்-19 தொற்றுறுதியான யாழ்ப்பாண மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்புகளைப் பேணியவர்கள், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத்துறை கோரியுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியானதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட நபர் ஒருபருக்கு கொரோனா தொற்றுறுதியாகியிருநதது.

குறித்த திருமண நிகழ்வில் தாமும் கலந்து கொண்டமையினால், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்ததுடன், பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய, அவருக்கு தொற்றுறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த 16ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்பை பேணியவர்கள், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு தொடர்புகளைப் பேணியவர்கள், பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியுடன் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.